நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லுக்குட் தொகுதி மக்களுக்கு தீபாவளி உதவிகள்; தேவைப்படும் உதவிகளை வழங்கினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும்: அர்விந்த் கிருஷ்ணன்

போர்ட்டிக்சன்:

தேவைப்படும் உதவிகளை வழங்கினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.

நாட்டில் உள்ள இந்து மக்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடவுள்ளனர்.

இந்த தீபாவளியை முன்னிட்டு மஇகா பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வருகிறது.

வசதிக் குறைந்த மக்களும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே மஇகாவின் முதன்மை இலக்காக உள்ளது.

இதன் அடிப்படையில் போர்ட்டிக்சன் லுக்குட் தொகுதியில் உள்ள வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

லிங்கி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமத் பைசால் ரம்லி, தொகுதி தலைவர் அச்சுதன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தீபாவளி போன்ற பெருநாள் காலங்களில் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.

குறிப்பாக தேவைப்படும் உதவிகளை வழங்கினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset