நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிண்டாஸ் வரலாற்றில் இரு சங்கங்களின் சங்கமம்; டிசம்பர் 30ஆம் நடைபெறவுள்ளது: இராஜசேகரன்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் சங்கம்-மிண்டாஸின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்வும் கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் 55ஆம் ஆண்டு விழாவும் அடுத்த மாதம் 30ஜ்ஜ்ஆம் நாள் மூன்று மணி அளவில் ஒருசேர நடைபெறவுள்ளது.

மிண்டாஸ் அமைப்பின் தலைவர் ஆர். ராஜசேகரன் இதனை தெரிவித்தார்.

பத்துமலை ஷெங்கா மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில் சிறப்பு பிரமுகராக முன்னாள் மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கலந்து கொள்கிறார்.

நாடு முழுவதிலும் இருந்து சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் இந்த இரட்டை விழா, சிகை அலங்கரிப்புத் தொழிலில் மேன்மையையும் நாகரிக சமுதாயத்தில் இந்த தொழிலின் பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கும் என்று ராஜசேகரன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே சிகை அலங்கார நிலையங்களுக்கு பெரிய அளவில் அந்நியத் தொழிலாளர்கள் எடுப்பது இல்லை.
குறைந்தது ஒரு கடைக்கு 2 தொழிலாளர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள்.

ஆக அத்தொழிலாளர்களை பெறுவதற்கான வழிமுறைகளை அரசு எளிதாக்க வேண்டும்.

இதுவே எங்களின் கோரிக்கையாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset