செய்திகள் மலேசியா
மருத்துவர்கள் பணமில்லா சேவைகளை இழக்கின்றனர்; பேங்க் நெகாரா விளக்கமளிக்க வேண்டும்: இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்:
ஒரு மருத்துவரை பணமில்லா சேவைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு முன்பு, காப்பீட்டு நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமான காரணங்கள், ஆதாரங்கள் மற்றும் மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் எனக் கோரும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை விளக்குமாறு பேங்க் நெகாராவிடம் கேட்கப்பட்டுள்ளது.
சுமார் 190 சிறப்பு மருத்துவர்கள் தங்களது பணமில்லா சேவைகளை இழந்துள்ளதாக மதிப்பிடப்படுவதாக மலேசிய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு,
முன்னாள் பிரதமரும் பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேள்வி எழுப்பினார்.
இந்த எண்ணிக்கை மிகவும் கவலையளிப்பதாக அவர் கூறினார்.
ஏனெனில் இறுதியில் நோயாளிகள் சிகிச்சைக்கான அணுகல், தொடர்ச்சி ஆகியவற்றில் பாதிக்கப்படுகின்றனர்.
பணமில்லா சிகிச்சை வசதிகளிலிருந்து சில சிறப்பு மருத்துவர்கள் நீக்கப்பட்டதாகவும், பணியில் இருந்த மருத்துவரிடம் பணமில்லா சிகிச்சை வசதி இல்லாததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளின் சிகிச்சையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் மற்ற மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்களை வரவழைக்க வேண்டியிருந்ததாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று நிதி அமைச்சகத்திற்கான 2027 பட்ஜெட் குழு அளவிலான விவாதத்தின் போது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2026, 8:45 pm
நஜிப்பிற்கான ஒற்றுமை நிதி போதாது: நன்கொடைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன
November 3, 2026, 8:44 pm
பூச்சோங்கில் உள்ள கோழி இறைச்சி வெட்டும் வளாகத்தின் உண்மையான உரிமையாளரை ஜாய்ஸ் தேடி வருகிறது
November 3, 2026, 5:55 pm
மிண்டாஸ் வரலாற்றில் இரு சங்கங்களின் சங்கமம்; டிசம்பர் 30ஆம் நடைபெறவுள்ளது: இராஜசேகரன்
November 3, 2026, 5:53 pm
சுஹாய்லி வழக்கு; சபாநாயகர் கூட ஒரு அதிகாரியை அறைய முடியாது: பிரதமர்
November 3, 2026, 5:03 pm
