நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுஹாய்லி வழக்கு; சபாநாயகர் கூட ஒரு அதிகாரியை அறைய முடியாது: பிரதமர்

கோலாலம்பூர்:

ஒருவரின் தகுதியும் நன்னடத்தையும் அவரை சட்ட நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்காது என்பதை வலியுறுத்த, பிரதமர் அன்வார் இப்ராஹிம், மக்களவை சபாநாயகர் தனது அதிகாரியை அறைந்த நிகழ்வை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் முகமது சுஹாய்லி முகமது ஜைன் தொடர்பான வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

ஆனால், இந்த சபாநாயகர் ஒரு நல்ல மனிதர் என்பதால், அவர் ஒரு அதிகாரியை அறையலாம் என்று என்னால் கூற முடியாது.

சபாநாயகர் அறைந்தால், சட்ட நடவடிக்கைகளின்படி அவர் காப்பாற்றப்படுவார் என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இன்று மக்களவையில் நடைபெற்ற பிரதமரின் கேள்வி-பதில் அமர்வில், அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் கேட்ட துணைக் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset