நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அங்கீகரிக்கப்படும் மலேசியத் திரைப்படங்களில் தணிக்கை வெட்டுக்கள் கூடாது: துணையமைச்சர் தியோ நீ சிங் கருத்து 

கோலாலம்பூர்: 

மலேசியத் திரைப்படங்கள் சர்வதேச அரங்கில் விருதுகளை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வேளையில், உள்நாட்டுப் பார்வையாளர்களுக்காக அத்திரைப்படங்களில் தணிக்கை வெட்டுக்கள் செய்யப்படக் கூடாது என்று துணைத் தகவல் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் (முக்கிய விருது வென்ற டைகர் ஸ்டிரைப்ஸ்) திரைப்படத்தைச் சான்றாகச் சுட்டிக்காட்டிய அவர், அத்திரைப்படம் உள்நாட்டு திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அதில் பல காட்சிகள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அமண்டா நெல் ஈ (Amanda Nell Eu) இயக்கிய இத்திரைப்படம், கேன்ஸ் விமர்சகர்கள் வாரத்தில் உயரிய விருதை வென்றதோடு, 2024-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கான மலேசியாவின் உத்தியோகபூர்வ பரிந்துரையாகவும் தேர்வு செய்யப்பட்டது.

எனினும், மலேசியப் பதிப்பில் செய்யப்பட்ட வெட்டுக்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட இயக்குனர் அமண்டா, அத்திரைப்படம் தான் உருவாக்கிய அசலான படைப்பாக இனி இல்லை என்று தெரிவித்திருந்தார்.

"ஒரு திரைப்படம் சர்வதேச அளவில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே வேளையில், மலேசியர்கள் தங்கள் நாட்டின் திரையரங்குகளில் அதன் முழுமையான பதிப்பைப் பார்க்க முடியாமல் போவது விசித்திரமானது,"

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான (P18) வகைப்படுத்தப்பட்ட சில திரைப்படங்கள், காட்சிகள் வெட்டப்படாமல் திரையிடப்படுவதை அனுமதிக்கும் அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தி அவர் மக்களவையில் (Dewan Rakyat) இவ்வாறு பேசினார்.

இந்த மாற்றம் மலேசியத் திரைப்படத் துறைக்கு ஒரு நேர்மறையான நடவடிக்கை என்று கூறிய தியோ, திரைப்படத் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு, திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களின் படைப்புகளைத் திட்டமிட்டபடியே வழங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் விவரித்தார்.

இருப்பினும், திரையரங்குகளில் எவற்றைத் திரையிடலாம் என்பது குறித்து திரைப்படத் தணிக்க வாரியமே (LPF) இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset