நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா தேர்தலில் பிரச்சாரத்திற்காக அரசு வளாகங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள்; எதிர்க்கட்சிகளின் விரக்தியான முயற்சிகளே ஆகும்: ஜாஹித்

ஜாசின்:

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முன்னணி  வேட்பாளர் டத்தோ கைதிரா அபு ஜஹார் மீது, பிரச்சாரத்தின் போது அரசு வளாகங்களையும் கேந்திரங்களையும் பயன்படுத்தியது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், விரக்தியடைந்த கட்சிகள் தேடும் ஒரு சாக்குப்போக்காகும்.

மற்ற கட்சிகளும் தத்தமது அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளை நடத்தியதால், இந்த விஷயத்தை ஒரு பிரச்சனையாகத் தாம் கருதவில்லை என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

மாறாக, தேவையற்ற சர்ச்சைகளைத் தூண்டக்கூடிய பிரச்சினைகளை எழுப்பாமல், மக்களின் விருப்பங்களை மதிப்பதோடு, அனைத்துக் கட்சிகளும் நல்ல மற்றும் நேர்மையான முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஒரு குழு விரக்தியடைந்தால், அவர்கள் பல்வேறு சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிப்பார்கள், பல்வேறு விஷயங்களைத் தேடுவார்கள்.

ஏனெனில் அவர்கள் மிகவும் விரக்தியில் இருக்கலாம்.

இதை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

இன்று இங்குள்ள அலமண்டா ஹாலில் நடைபெற்ற உயர்கல்வி, தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி  சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்துக் கட்சிகளும் விதிகளின்படி போட்டியிட வேண்டும் என்றும், ஒரு பிரச்சினையை மிகைப்படுத்துவதற்கு தேவையற்ற விஷயங்களைச் சாக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அஹ்மத் ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset