செய்திகள் மலேசியா
மாதத்திற்கு 4 முறை வெள்ளம்; சிலாங்கூரின் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெள்ளத் தணிப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர்:
கம்போங் மெலாயு சுபாங்கில் தொடர்ச்சியாக நிகழும் வெள்ளச் சம்பவங்களைத் தொடர்ந்து, சிலாங்கூரில் வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் செயலாக்கத்தை விரைவுபடுத்துவதை உறுதி செய்வதற்காக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அத்திட்டம் குறித்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையைக் கோரியுள்ளார்.
மாநில, மத்திய அரசுகள் இணைந்து செயல்படுத்தும், மொத்தம் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இந்த வெள்ளத் தணிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் செயலாக்கத்தை, குறிப்பாக அதிக அபாயம் உள்ள பகுதிகளில், விரைவுபடுத்த வேண்டும்.
ஆற்றை அகலப்படுத்துதல், கூடுதல் நீர்த்தேக்கங்களைக் கட்டுதல் மற்றும் ஆற்றைத் தூர்வாருதல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இரண்டு மூன்று முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நான் கவலைப்படுகிறேன்.
எனவே, ஆற்றை அகலப்படுத்தவும் கூடுதல் நீர்த்தேக்கங்களைக் கட்டவும் வேண்டியுள்ளது.
மொத்தம் 700 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதை எப்படி விரைவுபடுத்துவது? என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2026, 8:45 pm
நஜிப்பிற்கான ஒற்றுமை நிதி போதாது: நன்கொடைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன
November 3, 2026, 8:44 pm
பூச்சோங்கில் உள்ள கோழி இறைச்சி வெட்டும் வளாகத்தின் உண்மையான உரிமையாளரை ஜாய்ஸ் தேடி வருகிறது
November 3, 2026, 5:56 pm
மருத்துவர்கள் பணமில்லா சேவைகளை இழக்கின்றனர்; பேங்க் நெகாரா விளக்கமளிக்க வேண்டும்: இஸ்மாயில் சப்ரி
November 3, 2026, 5:55 pm
மிண்டாஸ் வரலாற்றில் இரு சங்கங்களின் சங்கமம்; டிசம்பர் 30ஆம் நடைபெறவுள்ளது: இராஜசேகரன்
November 3, 2026, 5:53 pm
சுஹாய்லி வழக்கு; சபாநாயகர் கூட ஒரு அதிகாரியை அறைய முடியாது: பிரதமர்
November 3, 2026, 5:03 pm
