செய்திகள் மலேசியா
பூச்சோங்கில் உள்ள கோழி இறைச்சி வெட்டும் வளாகத்தின் உண்மையான உரிமையாளரை ஜாய்ஸ் தேடி வருகிறது
ஷாஆலம்:
இஸ்லாமியச் சட்டத்திற்கு இணங்காத வகையில் இறைச்சி வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்ட பூச்சோங் கம்போங் ஸ்ரீ அமான் ஹிலிர், ஜாலான் ஜுருதேரா, லாட் 35இல் உள்ள கோழி இறைச்சி வெட்டும் வளாகத்தின் உண்மையான உரிமையாளரை சிலாங்கூர் இஸ்லாமிய மத விவகாரத் துறை (ஜாய்ஸ்) தேடி வருகிறது.
ஜாய்ஸ் இயக்குநர் டத்தோ முகமது ஷாஜிஹான் அகமது இதனை கூறினார்.
தனது தரப்பு அந்த வளாகத்தின் உரிமையாளர், கேள்விக்குரிய முகவரியில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் குறித்த மேலதிக தகவல்களை மாவட்ட மற்றும் நில அலுவலகத்திலிருந்து பெற்று வருவதாகக் கூறினார்.
கைது செய்யப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், அந்த வளாகத்தில் உள்ள செயல்பாடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்புகளால் நடத்தப்படுவதாக நம்பப்படுவதால், இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் குறித்து ஜாய்ஸால் இன்னும் பொதுமக்களுக்குத் தெரிவிக்க முடியவில்லை.
சரியான தகவல்கள் கிடைத்தவுடன், ஜாய்ஸ் உடனடியாக இது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும்.என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிறப்பு ஹலால் அமலாக்கக் குழுவின் உளவுத் தகவல் மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில், ஜாய்ஸ் போலிஸ், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம், சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றுடன் இணைந்து அக்டோபர் 30 அன்று அந்த வளாகத்தில் சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2026, 8:45 pm
நஜிப்பிற்கான ஒற்றுமை நிதி போதாது: நன்கொடைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன
November 3, 2026, 5:56 pm
மருத்துவர்கள் பணமில்லா சேவைகளை இழக்கின்றனர்; பேங்க் நெகாரா விளக்கமளிக்க வேண்டும்: இஸ்மாயில் சப்ரி
November 3, 2026, 5:55 pm
மிண்டாஸ் வரலாற்றில் இரு சங்கங்களின் சங்கமம்; டிசம்பர் 30ஆம் நடைபெறவுள்ளது: இராஜசேகரன்
November 3, 2026, 5:53 pm
சுஹாய்லி வழக்கு; சபாநாயகர் கூட ஒரு அதிகாரியை அறைய முடியாது: பிரதமர்
November 3, 2026, 5:03 pm
