நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கான ஒற்றுமை நிதி போதாது: நன்கொடைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன

ஜாசின்:

முன்னாள் பிரதமருக்கு உதவுவதற்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைச் சேகரிக்கத் தொடங்கப்பட்ட நஜிப் ரசாக் ஒற்றுமை நிதி இன்னும் போதுமானதாக இல்லை.

ஆனாலும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

அந்நிதி தினசரி வசூல் 10,000 ரிங்கிட் வரை எட்டுகிறது.

முன்னாள் பிரதமர் மீது விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கும், 2028 ஆகஸ்ட் 23 வரை தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கும் உதவும் ஒரு முயற்சியாக இந்த நிதி திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வஜ்தி டுசுகி, 1, 5, 10 ரிங்கிட் போன்ற சிறிய பங்களிப்புகள் உட்பட, பல்வேறு தரப்பினரிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டதாகக் கூறினார்.

பெறப்பட்ட நன்கொடைகளின் மொத்தத் தொகையைக் கண்டறிய, அம்னோ கட்சித் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளால் ஒவ்வொரு மணி நேரமும் நிதி சேகரிப்பின் முன்னேற்றம் கண்காணிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த வேகம் நன்றாக உள்ளது.

பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகள் மூலம் நாங்கள் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு உதவுகிறோம் என்பதே இதன் பொருள், என்று மலாக்கா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset