செய்திகள் விளையாட்டு
சாம்பியன் லீக் கிண்ணத்திற்காக பலோன் டி ஓர் விருதை விட்டுக்கொடுக்க கேய்ன் தயாராக உள்ளார்
முனிச்:
பலோன் டி ஓர் விருது வென்ற ஹாரி கேய்ன், பாயர்ன் முனிச் அணி அட்லாட்டிகோ மாட்ரிட்டைச் சந்திக்கவுள்ள நிலையில், சாம்பியன் லீக் கிண்ணத்திற்காக அந்த விருதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், சூப்பர் ஸ்டார்களான கிளையன் எம்பாப்பே, லமின் யமால் ஆகியோரை வீழ்த்தி, கேய்ன் உலகின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டு இந்த மதிப்புமிக்க விருதை வென்றார்.
இருப்பினும், தனது சக வீரர்களுடன் சேர்ந்து வெற்றியை அனுபவிப்பதற்காகவே கால்பந்து விளையாடுவதாக அந்த இங்கிலாந்து வீரர் கூறினார்.
அணியுடன் கிண்ணத்தை வெல்வதற்காகவே நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம்.
இந்த விளையாட்டில் அணி சார்ந்த அம்சம் மிகவும், மிகவும் முக்கியமானது.
கடந்த வாரம் பலோன் டி ஓர் விருதை வென்றது, என் வாழ்விலும் தொழில் வாழ்க்கையிலும் நான் பெற்ற மிகச் சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும்.
ஆனால், அணியுடன் சேர்ந்து மறக்க முடியாத தருணங்களை உருவாக்குவதும், கிளப்புடன் கொண்டாடுவதும், பாயர்ன் முனிச் அணியுடன் சாம்பியன்லீக் கிண்ணத்தை உயர்த்துவதும் ஒரு நம்ப முடியாத உணர்வாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2026, 4:06 pm
AFC ஆசியா கிண்ணம் 2027 டிசம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு
November 3, 2026, 10:51 am
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் பயிற்சியாளராகத் திரும்ப சோல்க்ஜர் ஆர்வம்
November 2, 2026, 11:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
November 2, 2026, 10:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
November 1, 2026, 8:42 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
November 1, 2026, 8:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
October 31, 2026, 8:00 am
பிபா 20 பில்லியன் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது
October 31, 2026, 7:59 am
மெஸ்ஸியை வீழ்த்தி ரொனால்டோ எல்லா காலத்திற்குமான பலோன் டி'ஓர் விருதை வென்றார்
October 30, 2026, 10:14 am
