நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவராக கென்னத் கண்ணா தேர்வு

பெட்டாலிங்ஜெயா:

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவராக கென்னத் கண்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் மூத்த கால்பந்து சங்கமாக பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் விளங்கி வருகிறது.

இச்சங்கத்தின் ஆண்டுக் கூட்டமும் புதிய நிர்வாக குழு தேர்வும் அண்மையில் நடைபெற்றது.

இதில் கென்னத் கண்ணா சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பத்துமலை, மோகன், சரஸ்குமார் ஆகியோர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.

செயலாளராகவும் குணாவும் பொருளாளராக ராமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை தந்த முன்னாள் தலைவருக்கும் சங்க நிர்வாகத்திற்கு எனது நன்றி.


சங்கத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக இன்னும் அதிகமான கால்பந்து சாதனையாளர்களை உருவாக்க வேண்டும்.

இதை இலக்காக கொண்டே சங்கத்தின் தலைவர் பதவியை தொடர்வேன் என்று கென்னத் கண்ணா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset