நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பணிக்கு டத்தோஸ்ரீ சுஹாய்லி மீண்டும் திரும்பியுள்ளார்

கோலாலம்பூர்:

ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் பணிக்கு டத்தோஸ்ரீ சுஹாய்லி மீண்டும் திரும்பியுள்ளார்

அவர் போலிஸ் படைக்கு மீண்டும் பணியாற்றத் திரும்புவார் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறியிருந்தபோதிலும்,

அவர் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் (ஏகேபிஎஸ்) தலைமை இயக்குநராக மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

கடந்த வாரம் முதல் விடுப்பில் இருந்த சுஹாய்லி, இன்று அதிகாரிகள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி மீண்டும் பணிக்குத் திரும்பியதாக ஏகேபிஎஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

அனைத்து மூத்த அதிகாரிகளையும் ஏகேபிஎஸ் நுழைவாயில் தளபதிகளையும் ஒன்றிணைத்த இந்தக் கூட்டம், 2027 இயக்கம், குறிப்பாக நாட்டின் எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பின் மூலோபாய திசை, செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset