நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேரா மாநில அரசாங்கம் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

இந்தியர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேரா மாநில அரசாங்கம் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் இதனை கூறினார்.

பேரா மாநிலத்தில் இந்திய, இந்து சமூகத்தினரின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மாநில அரசாங்கம் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்தியர்களின் நலத்திட்டங்களுக்கும் குறிப்பாக கலவி, சமுகம், சமய விவகாரங்களுக்கு்மேலும் கூடுதல் நிதி ஒதுகீட்டை மாநில அரசாங்கத்திடம் கோரிக்கையை முன் வைத்துள்ளது.

ஆகவே இம்மாதம் 24ஆம் தேதி பேரா மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யபடவிருக்கும் பட்ஜெட்டில் கூடுதல நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நேற்றிரவு சுங்கை சட்டமன்றத் தொகுதியில் பீடோருல் உள்ள சமுக்மண்டபத்தில் நடத்திய தீபாவளி நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

தாப்பா நாடாளுமன்றத் தொகுதி, மூவாலிம், பத்தாங் படாங் பகுதிகளில் முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கான மயான வசதிகள் இல்லாதது மற்றொரு முக்கியப் பிரச்சினையாக இருந்து வந்தது. இதனால், இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள மக்கள் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


சுமார் 40 ஆண்டுகள் பழமையான தேவான் முயிபா  மண்டபம், அப்பகுதியில் வாழும் இந்திய மக்களின் முக்கியமான சமூக நிகழ்வுகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, இந்தியர்கள் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அந்த மண்டபமே முக்கிய இடமாக இருந்து வந்தது.


இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் துறை அமைச்சின் மூலம் 25 லட்சம் ரிங்கிட் நிதி கோரப்பட்டதுடன், பேரா மாநில அரசாங்கமும் சுமார் 3.3 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி நிதியுதவி வழங்கியுள்ளது. இதன் மூலம் இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு சுமார் 35 லட்சம் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.

தற்போது இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், பேரா மாநிலத்தில் இந்து ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset