நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் பாருவில் கேடிஎம்பி (KTMB) சரக்கு ரயிலில் தீ விபத்து: உயிர்ச்சேதம் ஏதுமில்லை

ஜொகூர் பாரு:

ஜொகூர் பாருவில் உள்ள தாமன் டாயா (Taman Daya) அருகே, 4.75-வது கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த 'கேரெதாபி தானா மெலாயு பெர்ஹாட்' (KTMB) நிறுவனத்தின் சரக்கு ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரயில் பகுதி சேதமடைந்தது.

இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தெப்ராவ் (Tebrau) தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி நூர் அஸ்மி மரியோனோ கூறுகையில், கெம்பாஸ் பாரு (Kempas Baru) நிலையத்திலிருந்து பாசீர் கூடாங் (Pasir Gudang) நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

தீயணைப்பு, மீட்புத் துறையினருக்கு மதியம் 1:26 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

ஜொகூர் பாருவில் உள்ள தாமன் டாயா அருகே, கேடிஎம்பி (KTMB) சரக்கு ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

“இதனைத் தொடர்ந்து, ஏழு பேர் கொண்ட குழுவினர், தீயணைப்பு வாகனத்துடன் (FRT) சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“அங்கு சென்றடைந்த குழுவினர், சரக்கு ரயிலின் என்ஜினில் தீப்பிடித்திருப்பதைக் கண்டறிந்தனர். இதில் சுமார் ஐந்து சதவீத சேதம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் நூர் அஸ்மி கூறினார்.

இந்தச் சம்பவத்தின் படங்கள் முன்னதாக சமூக ஊடகங்களில் பரவியிருந்தன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset