நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தரையிறங்கச் சில நொடிகள்... திடீரெனச் சாய்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்

பெர்த்:

விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்க வந்த விமானம்...

திடீரென ஒரு பக்கமாகச் சாய்ந்தது...

பார்ப்போரைப் பதறவைக்கும் அந்தக் காணொலி  இணையத்தில் பரவலானது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ213 விமானம், ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சில நோடிகளில், திடீரென ஒரு பக்கம் சாய்ந்தது.

விமானத்தின் இறக்கை தரைக்கு மிக அருகில் செல்வதைக் காணொலியில் பார்க்க முடிந்தது.

பலத்த காற்று வீசியதால், விமானிகள் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டதாக தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் மேல் நோக்கிச் செலுத்தப்படுவதைக் காணொளியில் காணமுடிந்தது.

விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் சகோதரர் நடந்தவற்றைக் காணொலியில் பதிவிட்டார்.

விமானம் ஓடுபாதையில் மோதிவிடுமோ என்ற அச்சம் அவரை நிலைகுலைய வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

விமானம் இரண்டாவது முயற்சியில் பிற்பகல் 12.30 மணிக்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset