நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இத்தாலியில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: போலிஸ் குவிப்பு 

ரோம்: 

இத்தாலி நாட்டில் பள்ளிகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடுகள், வீட்டுடமை திட்டத்திற்கு நிதி பகிர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் 

மாணவர்களின் கோரிக்கைகள் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு தற்போது தீவிரமடைந்துள்ளது 

எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பாதுகாப்புச் செலவின உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக, லாரி ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களுடன் இத்தாலியப் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

இத்தாலியில் இதற்கு முன் மிலான் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் இதேபோல் வன்முறை மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே அதிகாரிகள் எண்ணம் கொண்டுள்ளனர். 

பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து இத்தாலியிலும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் பதற்றம் நிலவியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset