செய்திகள் உலகம்
துபாய்க்கான SIA விமானச் சேவை ரத்து: பிப்ரவரி 2027 வரை நீட்டிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் துபாய்க்கான அதன் சேவைகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிவரை ரத்து செய்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் அதற்குக் காரணம்.
முன்னதாக டிசம்பர் முதலாம் தேதிவரை அந்தச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
சிங்கப்பூரிலிருந்து துபாய் செல்லும் SQ494 விமானமும் துபாயிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் SQ495 விமானமும் பாதிக்கப்பட்டுள்ளன.
நிலைமை மாறிக்கொண்டே இருப்பதால் மற்ற விமானச் சேவைகளும் பாதிக்கப்படக்கூடும் என்று நிறுவனம் கூறியது.
பாதிக்கப்பட்டோர் பயன்படுத்தாத பயணச்சீட்டுக்கான முழுத் தொகையைத் திரும்பப் பெறலாம்.
பயண முகவர்கள் மூலம் விமானச் சீட்டு வாங்கியோர் நேரடியாக முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டது.
அமெரிக்கா அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் இடைத்தவணைத் தேர்தலுக்குப் பிறகு ஈரானைத் தாக்கலாம் என்று கூறப்படுகிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 30, 2026, 11:01 pm
உக்ரைனில் 2 ரயில்கள் மீது ரஷ்யா தாக்குதல்: 14 பேர் பலி
October 30, 2026, 5:49 pm
இத்தாலியில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: போலிஸ் குவிப்பு
October 29, 2026, 10:40 am
ஸ்பெயின் இரயில் விபத்து: பலி எண்ணிக்கை 68ஆக உயர்வு
October 28, 2026, 4:05 pm
இஸ்ரேல் நாட்டின் பொதுத்தேர்தல்: அரசாங்கத்தை அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லை
October 27, 2026, 11:37 am
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
October 27, 2026, 11:10 am
தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகிய 'ஜெட்2' விமானம்: பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பரபரப்பு
October 27, 2026, 9:52 am
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஜப்பானிய செய்தியாளர்: ஜப்பானின் அதிகாரிகள் சந்திப்பு
October 26, 2026, 9:06 pm
