செய்திகள் இந்தியா
பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
மும்பை:
தங்கள் நிறுவனத்தின் ‘பிரட்’ 100 சதவீதம் முழுக் கோதுமையால் தயாரிக்கப்பட்டது என்று பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு இந்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
அந்த நிறுவன தயாரிப்பு பிரட்டில் 62 சதவீதம் அளவுக்கே கோதுமை இருந்த நிலையில், விளம்பரம் மூலம் மக்கள் மத்தியில் பொருள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது பிரிட்டானியா விளம்பரப்படுத்தும் முழுக் கோதுமை பிரட்டில் 62 சதவீதம் கோதுமை, மீதமுள்ள 38 சதவீதத்தில் அரிசித் தவிடு உள்ளிட்ட பொருள்கள் சோ்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, நுகா்வோருக்கு தவறான தகவலைத் தெரிவித்து பொருள்களை விற்பனை செய்தது, நியாயமற்ற வா்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
மேலும், இது தொடா்பான விளம்பரங்களை அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என எதிலும் வெளியிடக் கூடாது. ஏற்கெனவே சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்து வந்தால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 6:31 pm
பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
October 21, 2026, 10:34 pm
போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்திய அரசு மீது ஐநா நிபுணர்கள் குற்றச்சாட்டு
October 19, 2026, 6:10 pm
இந்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகை
October 19, 2026, 3:22 pm
டெல்லி விமான நிலையத்தில் 3.2 கிலோ தங்கக்கட்டிகள்: துபாயிலிருந்து கடத்தி வந்தவர் சிக்கினார்
October 19, 2026, 10:31 am
சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம்
October 18, 2026, 10:20 am
இந்தியத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமாருக்கு எதிராக லண்டனில் மாணவர்கள் போராட்டம்
October 14, 2026, 11:39 am
பீகார் மாநிலத்தில் சோகம்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு
October 13, 2026, 10:34 pm
