செய்திகள் இந்தியா
பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
புது டெல்லி:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அக்டோபர் 21 அன்று பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்த அறிக்கையில் டார்க் வெப்பில் கிடைக்கப்பெற்ற சுமார் 3.75 லட்சம் பதிவுகளை முதற்கட்டமாக பரிசீலித்ததில், தனிப்பட்ட நபர்களை அடையாளம் காணக்கூடிய விவரங்களைக் கொண்ட 3,897 பதிவுகள் கசிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கசிந்த தகவல்களில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பெயர், பாலினம், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்கள், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரிகள், வீட்டு முகவரிகள் அடங்கும்.
மேலும், வங்கிக் கிளை, வாடிக்கையாளர் தகவல் கோப்பு (சிஐஎப்) எண்கள், கடன் தொடர்புகளுக்கான லீடு ஐடி-கள், கடன் பதிவுகள் சார்ந்த பிற விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட ஒரு சுயாதீன சைபர் பாதுகாப்பு முகமையை விசாரணைக்காக நியமித்துள்ளோம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தால் வங்கியின் வணிக, நிதிச் செயல்பாடுகளுக்கு எந்த பாதிப்பும் தற்போதைக்கு இல்லை, வங்கியின் சேவைகள் தடங்கலின்றி வழக்கம்போல இயங்கி வருகின்றன என்றும் உறுதியளித்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கசிவின் எல்லையைத் தீர்மானிக்க விரிவான மதிப்பீடு தேவைப்படுவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ-யின் முதற்கட்ட விசாரணையில் தனிப்பட்ட விவரங்களும் கடன் தொடர்பான தரவுகளுமே கண்டறியப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வாடிக்கையாளரின் கணக்கு கடவுச்சொற்கள், பின் எண்கள் அல்லது பரிவர்த்தனை விவரங்கள் திருடப்பட்டதாகத் தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அச்சப்படத் தேவையில்லை என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 10:34 pm
போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்திய அரசு மீது ஐநா நிபுணர்கள் குற்றச்சாட்டு
October 19, 2026, 6:10 pm
இந்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகை
October 19, 2026, 3:22 pm
டெல்லி விமான நிலையத்தில் 3.2 கிலோ தங்கக்கட்டிகள்: துபாயிலிருந்து கடத்தி வந்தவர் சிக்கினார்
October 19, 2026, 10:31 am
சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம்
October 18, 2026, 10:20 am
இந்தியத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமாருக்கு எதிராக லண்டனில் மாணவர்கள் போராட்டம்
October 14, 2026, 11:39 am
பீகார் மாநிலத்தில் சோகம்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு
October 13, 2026, 10:34 pm
