நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் நிலையில், புதிய தலைமுறையைத் தொழில்நுட்பத்தில் திறமையானவர்களாக உருவாக்க வேண்டும்: அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

ஊடகங்கள், அரசு, சமூகத்தினருக்கிடையிலான ஒத்துழைப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் அவசியம் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

ஊடகங்கள் மக்களின் தேவைகள், பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்வதோடு, அரசின் முடிவுகளையும் மக்களிடம் விளக்குகின்றன என்றார்.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தலைவர்கள் பதிலளித்து, உண்மையான தகவல்களைப் பகிர்வது முக்கியம் என்றார் அவர்.

மலேசியாவின் பல்வேறு இன, மத, கலாசார சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதே நாட்டின் பலம் என்றும், கருத்து வேறுபாடுகளைப் பிரிவினையின்றி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியச் சமூகத்துடன் தொடர்புடைய கோவில், பள்ளி, வீடமைப்பு, தொழில்முனைவோர் ஆதரவு போன்ற விவகாரங்களில் தீர்வு காண அரசு முயற்சி செய்து வருவதாக அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார். 

பள்ளிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு, TEKUN முயற்சிகளையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் நிலையில், புதிய தலைமுறையைத் தொழில்நுட்பத்தில் திறமையானவர்களாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சமூகத்தினர் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகலாம் என்றும், ஒன்றாக அமர்ந்து தீர்வுகளைத் தேடத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இறுதியாக, வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset