நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய வர்த்தகர்களை பினாங்கு இந்தியர்கள் கைவிட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சுந்தரராஜூ

ஜார்ஜ்டவுன்:

இந்திய வர்த்தகர்களை பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் கைவிட மாட்டார்கள்.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு இதனை கூறினார்.

மூக்குத்தி பேலஸின் நான்காவது கிளை பினாங்கில் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வேகையில் அதன் உரிமையாளர்களான டத்தோ முஹம்மத் அனுவார், டத்தின் சித்தி ஆயிஷா ஆகியோக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மூக்குத்திக்கு என ஒரு பேலஸ் இருப்பது எனக்கு இன்று தான் தெரியும். இதுவொரு புதுவிதமான தொழிலாகும்.

மூக்குத்தியை மட்டும் நம்பி இன்று நான்காவது கிளையை அவர்கள் திறந்துள்ளனர்.

ஆக இத்தொழிலிலில் அவர் மேலும் முன்னேறி செல்ல வேண்டும். இன்னும் அதிகமான கிளைகளை அவர்கள் திறக்க வேண்டும்.

இப்போது அவர்கள் பினாங்கு மக்களை நம்பி இங்கு கடையை திறந்துள்ளனர்.

இந்திய வர்த்தகர்களை பினாங்கு இந்தியர்கள் கைவிட மாட்டார்கள். இது என வாக்குதியாகும்.

மேலும் நமது பாரம்பரிய வர்த்தகர்கள் சமூக ஊடங்களை பயன்படுத்தியும் வர்த்தகங்களை மேற்கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்கள் மேலும் அவர்களுக்கு வெற்றியை தரும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset