நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுல்தான் குணமடைய பிரதமர் பிரார்த்தனை

கோலாலம்பூர்:

இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷா குணமடைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரார்த்தனை செய்தார்.

மேலும் இறைவனின் பாதுகாப்பிலும் ஆசீர்வாதங்களிலும் மாட்சிமை பொருந்திய சுல்தான் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்தார்.

சுல்தான் ஷராபுடின் இத்ரீஸ் ஷா விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

முன்னதாக, இஸ்தானா ஆலம் ஷா ஒரு அறிக்கையில், 

நேற்று காலை முதல் சுல்தான் ஷராபுடினுக்கு கடுமையான காய்ச்சல், கை கால்களில் பலவீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது தனிப்பட்ட மருத்துவர்களான டத்தோ டாக்டர் அனுவார் ஓனா, டத்தோ டாக்டர் டான் ஹுய் மெங் ஆகிய இருவரால் இந்தத் தொற்று கண்டறியப்பட்டதாக அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset