செய்திகள் மலேசியா
பாகான் டத்தோவில் 2,000 இந்திய பி40 குடும்பங்களுக்கு தீபாவளி அத்தியாவசியப் பொருட்கள்: துணைப் பிரதமர் வழங்கினார்
பாகான் டத்தோ:
பாகான் டத்தோவில் 2,000 இந்திய பி40 குடும்பங்களுக்கு தீபாவளி அத்தியாவசியப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.
துணைப் பிரதமரும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை வழங்கினார்.
வசதிக் குறைந்த மக்களும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் டத்தோஸ்ரீ ஜாஹித் ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார்.
அவ்வகையில் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 2,000 இந்திய பி40 குடும்பங்களுக்கு தீபாவளி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்ப்பள்ளிகளச் சேர்ந்த 700 மாணவர்களுக்கு தலா 100 ரிங்கிட் கல்வி உதவி வழங்கப்பட்டது.
16 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டடது.
இந்த நிகழ்வு டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2026, 2:48 pm
இந்திய வர்த்தகர்களை பினாங்கு இந்தியர்கள் கைவிட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சுந்தரராஜூ
November 1, 2026, 9:32 am
சிலாங்கூர் சுல்தான் குணமடைய பிரதமர் பிரார்த்தனை
November 1, 2026, 8:37 am
