செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் தேசியக் கூட்டணி பிரதிநிதிகளுக்கும் ஆட்சியில் பங்கேற்க அழைப்பு: ஜாஹித்
பாகான் டத்தோ:
மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி இணைந்து தேர்தல் பணிகளை முன்னெடுக்கும்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தேசியக் கூட்டணி சார்பில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித்
ஹமிடி கூறினார்
தேர்தல் பணிகளைச் சுமுகமாக முன்னெடுக்கும் வகையில் இரு கூட்டணிகளையும் சேர்ந்த தலைவர்கள் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று, உள்ளூர் அளவில் தேர்தல் இயந்திரங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உள்ளதாக அவர் கூறினார்.
தேர்தல் களத்தில் சில தொகுதிகளில் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.
இருப்பினும் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் இணைந்து செயல்பட்டு தேர்தல் நடவடிக்கைகளைச் சீரமைப்பார்கள் என்றார்.
முன்னதாக நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது தேசியக் கூட்டணி பிரதிநிதிகளுக்கும் ஆட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று மலாக்காவிலும் ஒற்றுமை அரசாங்கம் அமைந்தபோது தேசியக் கூட்டணி தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
எனினும், பின்னர் அக்கட்சியின் தலைமைத்துவம் தனது முடிவை மாற்றிக்கொண்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகக் கூறிய அவர், இம்முறையும் தேசிய முன்னணி வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் தேசியக் கூட்டணி சார்பில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைந்து செயல்பட அழைப்போம் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 1, 2026, 2:48 pm
இந்திய வர்த்தகர்களை பினாங்கு இந்தியர்கள் கைவிட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சுந்தரராஜூ
November 1, 2026, 9:32 am
சிலாங்கூர் சுல்தான் குணமடைய பிரதமர் பிரார்த்தனை
November 1, 2026, 8:37 am
