நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் அம்பாங் ஹோட்டலில் ‘மினி கேசினோ’வாக இயங்கி வந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 16 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர்:

ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டல் பென்ட்ஹவுஸில் ‘மினி கேசினோ’ இயங்கி வந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து 16 வெளிநாட்டினரை காவல்துறை கைது செய்துள்ளது.

இன்று அதிகாலை 1.50 மணிக்கு இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் கூறினார்.

“அந்த பென்ட்ஹவுஸ், நெருங்கிய அறிமுகமானவர்களுக்கு மட்டுமேயான ஒரு மினி சூதாட்ட இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதில் சீன நாட்டினர் மட்டுமே ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில், ஒரு பெண் உட்பட 15 சீன நாட்டினரும், ஒரு நேபாளியரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 26 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset