நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாத்தா ஆயர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வான் பதாரியா காலமானர்: குடும்பத்தினருக்கு ஃபஹ்மி இரங்கல்

கோலாலம்பூர்:

நேற்று காலமான மாத்தா ஆயர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வான் பதாரியா வான் சாத் அவர்களின் குடும்பத்தினருக்கு, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

"மறைந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மறைந்தவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கவும், அவரது ஆன்மாவிற்கு அருள்புரியவும், அவரை இறைநம்பிக்கையாளர்கள், நீதிமான்களின் வரிசையில் சேர்க்கவும் ஃபஹ்மி பிரார்த்திப்பதாகக் கூறினார்.

வான் பதாரியா, காங்காரில் உள்ள துவாங்கு ஃபௌசியா மருத்துவமனையில் நேற்று மாலை 4:26 மணிக்கு காலமானார்.

இவர் 15-வது பொதுத் தேர்தலின் போது, ​​பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional) கூட்டணியின் சார்பில் மாட்டா ஆயர் தொகுதியில் போட்டியிட்டு, 2,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

— பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset