நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை நம்பிக்கைக் கூட்டணிக்கு சாதகமாக அமையும்: டத்தோஶ்ரீ ரமணன்

அலோர் காஜா:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை, வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள 16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகால மடானி அரசாங்கத்தின் ஆட்சியில் ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளதுடன், அந்நிய முதலீடுகளின் வருகையும் அதிகரித்துள்ளதைப் போன்ற சாதனைகளைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடம் முறையாக எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்று கெஅடிலான் உதவித் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் இன்னும் கணிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், ஒவ்வொரு அரசியல் கூட்டணியும் முன்வைக்கும் கொள்கைகள், திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படும்.

எனவே, நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் இயந்திரம் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, அரசாங்கத்தின் சாதனைகள், மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், எதிர்காலத்தில் செயல்படுத்த உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

அரசாங்கத்தின் சாதனைகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் அடிமட்ட மக்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தகவல்கள் முறையாகச் சென்றடையாவிட்டால், அரசாங்கம் முன்னெடுத்துள்ள பணிகள் குறித்து மக்களுக்குத் தெரியாமல் போகும். எனவே, அடிமட்ட அளவிலான தகவல் தொடர்பு அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் டத்தோஸ்ரீ  ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset