நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் 2,000 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்: டத்தோ சுரேஷ்குமார்

ஈப்போ:

தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் 2,000 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்

தம்பூன் நாடாளுமன்ற தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் இதனை கூறினார்.

தஞ்சோங் ரம்புத்தான் சமய்பர மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்விற்குப் பின்னர் இதனைத் தெரிவித்தார்.


பி40 பிரிவைச் சேர்ந்த சுமார் 2,000 இந்தியக் குடும்பங்களுக்கு பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு இந்தியக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டும் வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்களைக் வாங்குவதற்கு பற்றுச் சீட்டு, ரொக்கப் பணமாக 50 ரிங்கிட்டும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகள் வழங்கப்பட்டு வந்ததாகவும், அவற்றை எடுத்துச் செல்வதில் குறிப்பாக வயதானவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset