நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

28 மலாக்கா சட்டமன்றத் தொகுதிகளில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

மலாக்கா:

16ஆவது மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 79 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி, தேசியக் கூட்டணி ஆகிய கூட்டணிகள் அனைத்து தொகுதிகளிலும் மோதிக்கொண்டதால், 28 தொகுதிகளில் 112 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த முறை வேட்பாளர்களின் பங்கேற்பு குறைந்துள்ளது என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ ரம்லான் ஹருன் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி  அதிகபட்சமாக 24 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி (23), பெர்சாமா (16), பெர்சத்து (ஏழு), தேசியக் கூட்டணி (ஐந்து), புத்ரா (ஒருவர்) ஆகிய கட்சிகள் போட்டியிடுவதாக அவர் கூறினார்.

இந்தத் தேர்தலில் மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

மொத்தமுள்ள 79 வேட்பாளர்களில் 65 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் அடங்குவர்.

மலாக்கா தேர்தலில் 11 நேருக்கு நேர் போட்டிகளும், 11 மும்முனைப் போட்டிகளும், ஆறு நான்முனைப் போட்டிகளும் நடைபெற்றன.

நான்கு முனைப் போட்டிகள் காடேக், கெலேபாங், பெங்கலான் பத்து, ஆயர் குரோ, புக்கிட் கட்டில், பெம்பான் ஆகிய தொகுதிகளில் நடைபெற்றன.

தெலோக் மாஸ் தொகுதியில் நம்பிக்கை  கூட்டணியின் மூத்த வேட்பாளர் 66 வயதான முகமது ஜாஃபர் என்றும், கோலா லிங்கி தொகுதியில் கூட்டணியின் இளைய வேட்பாளர் 24 வயதான முக்லிசுல் முபின் ஜுலாசபியா என்றும் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset