செய்திகள் மலேசியா
31 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக நிலப்பட்டா வழங்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
சித்தியவான்:
சித்தியவான், கம்போங் டிராலிக் இந்தியக் குடியிருப்புகளைச் சேர்ந்த 31 பேருக்கு நிலப்பட்டா இன்று வழங்கப்பட்டது என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இக்குடியிருப்பாளர்களின் நிலப்பட்டா விவகாரத்திற்கு தனது தலைமையில் தொடர்ந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
கடந்த தவணை ஆட்சியில் 51 பேருக்கு நிலப்பட்டா வழங்கப்பட்ட நிலையில் இன்று 31 பேருக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.
சுங்கை வாங்கி தோட்டத்தில் உள்ள தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற நிலப்பட்டா வழங்கும் நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர களிடம் தெரிவித்தார்.
நீண்டகால நில உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டதால மக்களின் கனவு நனவானது என டத்தோ சிவநேசன்
கூறினார்.
இந்தியக் குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த நில உரிமையை உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை, அவர்களின் குடும்பங்களுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று தெரிவித்தார்.
நிலப்பட்டா என்பது வெறும் ஆவணம் மட்டுமல்ல; அது ஒருவரின் நில உரிமையை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் குடும்பப் பாதுகாப்புக்கும் எதிர்கால நம்பிக்கைக்கும் அடித்தளமாக அமைகிறது என்று அவர் கூறினார்.
கம்போங் டிராலிக் இந்தியக் குடியிருப்பாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பையும் தேவையையும் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 1:39 pm
28 மலாக்கா சட்டமன்றத் தொகுதிகளில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
October 31, 2026, 12:43 pm
மலாக்காவில் வேட்புமனுத்தாக்கல் அமைதியான முறையில் நடந்தது: போலிஸ் தகவல்
October 31, 2026, 12:39 pm
மலாக்கா மாநில முதலமைச்சராக அப்துல் ரவுப் யூசோப்: ஜாஹித் ஹமிடி பரிந்துரை
October 31, 2026, 12:14 pm
மலாக்கா தேர்தல்: தஞ்சோங் பிடாரா தொகுதியில் ABDUL RAUF YUSOF வேட்புமனுதாக்கல்
October 31, 2026, 12:10 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கனமழை, சூரைக்காற்று எச்சரிக்கை
October 31, 2026, 12:07 pm
சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்டம் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும்
October 31, 2026, 10:30 am
