செய்திகள் மலேசியா
மலாக்காவில் வேட்புமனுத்தாக்கல் அமைதியான முறையில் நடந்தது: போலிஸ் தகவல்
மலாக்கா:
மலாக்காவில் இன்று காலை வேட்புமனுத்தாக்கல் சுமூகமாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்ததாக மலாக்கா மாநில போலிஸ் தலைவர் டத்தோ சுல்கைஹ்ரி முக்தார் கூறினார்.
அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்றும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்று அவர் குறிப்பிட்டார்
அடுத்த இரு வாரங்கள் நடைபெறும் தேர்தல் பிரச்சாரம் அமைதியாக நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்
மலாக்காவில் 28 வேட்புமனு மையங்களில் 1159 போலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்தனர்.
அடுத்த 14 நாட்கள் பிரச்சார காலங்களில் 500 முதல் 600 நடமாடும் போலிஸ் அதிகாரிகள் செயல்படுவார்கள். அவர்கள் ரோந்து நடவடிக்கையிலும் இருப்பார்கள் என்று அவர் சொன்னார்.
3R விவகாரங்களை எந்தவொரு தரப்பும் கையில் எடுக்க வேண்டாம் என்று அவர் திட்டவட்டமாக சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 1:39 pm
28 மலாக்கா சட்டமன்றத் தொகுதிகளில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
October 31, 2026, 1:37 pm
31 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக நிலப்பட்டா வழங்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
October 31, 2026, 12:39 pm
மலாக்கா மாநில முதலமைச்சராக அப்துல் ரவுப் யூசோப்: ஜாஹித் ஹமிடி பரிந்துரை
October 31, 2026, 12:14 pm
மலாக்கா தேர்தல்: தஞ்சோங் பிடாரா தொகுதியில் ABDUL RAUF YUSOF வேட்புமனுதாக்கல்
October 31, 2026, 12:10 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கனமழை, சூரைக்காற்று எச்சரிக்கை
October 31, 2026, 12:07 pm
சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்டம் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும்
October 31, 2026, 10:30 am
