நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கனமழை, சூரைக்காற்று எச்சரிக்கை

கோலாலம்பூர்: 

நாட்டின் கிழக்குக்கரை, மேற்குகரை, கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இன்று கனமழையும் சூரைக்காற்றும் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வார இறுதியில் கடுமையான மழை இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது

ஆக, காலை வேளையில் வானிலை சீராகவும் மாலை வேளையில் கடும் மழை, சூரைக்காற்று வீசும் என்று மெட் மலேசியா சொன்னது

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர் மாவட்டங்களில் மாலை வேளையில் கடும் மழை பொழியும் 

இந்த மழையானது இரவு வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

கிழக்கு கரை மாநிலங்கள் மாலை வேளையில் மழை, சூரைக்காற்றினை எதிர்க்கொள்ளும் 

வானிலை தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் மெட் மலேசியா தகவல்களை உடனுக்குடன் பார்க்க வேண்டும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டது.

 

-மவித்திரன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset