நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில முதலமைச்சராக அப்துல் ரவுப் யூசோப்: ஜாஹித் ஹமிடி பரிந்துரை

மலாக்கா: 

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப்பெற்றால் அப்துல் ரவுப் யூசோப் மீண்டும் மாநில முதலமைச்சராக வேண்டும் 

இந்த பரிந்துரையைத் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி முன்வைத்தார் 

இந்த பரிந்துரையானது மலாக்கா மாநில ஆளுநரின் அதிகாரத்தை மீறும் செயலாக இருக்காது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

மலாக்கா மாநில மக்களிடமே ஆட்சி அதிகாரத்தை முடிவெடுக்கும் நிலையை தேசிய முன்னணி கொடுத்துவிட்டது. 

இனி மக்களின் தங்களின் மாநில அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கட்டும் என்று துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி சொன்னார். 

முன்னதாக தஞ்சோங் பிடாரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முதலமைச்சருமான அப்துல் ரவுப் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 10ஆம் தேதி நடக்கிறது என்று மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset