செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தல்: தஞ்சோங் பிடாரா தொகுதியில் ABDUL RAUF YUSOF வேட்புமனுதாக்கல்
தஞ்சோங் பிடாரா:
பாரிசான் நேஷனல் வேட்பாளரும், தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினருமான டத்தோஸ்ரீ ABDUL RAUF YUSOF
இன்று காலை வேட்புமனு தாக்கல் மையத்திற்கு வந்தடைந்தார்.
நீல நிற பாஜு மலாயு அணிந்திருந்த மலாக்கா முதலமைச்சரான ABDUL RAUF YUSOF, காலை 8.58 மணியளவில் BN தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியுடன் அங்கு வருகை தந்தார்.
அதனைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் டத்தோ ஹாஜி அப்துல் கரீம் மண்டபத்தில் வேட்புமனு தாக்கல் மையத்திற்குள் நுழைந்த அவர், மலாக்கா மாநிலத் தேர்தலில் தஞ்சோங் பிடாரா தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் தனது வேட்புமனு படிவத்தைச் சமர்ப்பித்தார்.
இதற்கிடையில், ABDUL RAUF YUSOFவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நீல நிற ஆடைகளை அணிந்திருந்த பிஎன் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் காலை 7 மணியிலிருந்தே வேட்புமனு தாக்கல் மையத்தின் அருகே திரண்டனர்.
பின்னர், கட்சிக் கொடிகளை ஏந்தியவாறு சுமார் 100 மீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்ற அவர்கள், GELOMBANG BIRU என முழக்கமிட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 1:39 pm
28 மலாக்கா சட்டமன்றத் தொகுதிகளில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
October 31, 2026, 1:37 pm
31 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக நிலப்பட்டா வழங்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
October 31, 2026, 12:43 pm
மலாக்காவில் வேட்புமனுத்தாக்கல் அமைதியான முறையில் நடந்தது: போலிஸ் தகவல்
October 31, 2026, 12:39 pm
மலாக்கா மாநில முதலமைச்சராக அப்துல் ரவுப் யூசோப்: ஜாஹித் ஹமிடி பரிந்துரை
October 31, 2026, 12:10 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கனமழை, சூரைக்காற்று எச்சரிக்கை
October 31, 2026, 12:07 pm
சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்டம் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும்
October 31, 2026, 10:30 am
