செய்திகள் உலகம்
தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகிய 'ஜெட்2' விமானம்: பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பரபரப்பு
பர்மிங்ஹாம்:
இத்தாலியின் வெனிஸ் நகரிலிருந்து பிரிட்டனின் பர்மிங்ஹாம் விமான நிலையத்திற்கு வந்த 'ஜெட்2' நிறுவனத்தின் போயிங் 737-800 விமானம், தரையிறங்கிய சில வினாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புல்வெளிப் பகுதிக்குள் சென்று சீறி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தின் பரபரப்புச் சுவடுகள் அடங்குவதற்குள், அதுகுறித்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:19 மணியளவில் பர்மிங்ஹாம் விமான நிலையத்தின் 33-வது ஓடுதளத்தில் தரையிறங்கியதாக 'சிம்பிள் பிளையிங்' வலைத்தளம் தெரிவித்துள்ளது.
தற்போது பிரிட்டனை அச்சுறுத்தி வரும் 'போலோ' புயல் காரணமாக வீசி வரும் பலத்த சூறாவளிக் காற்றே இந்த ஆபத்தான விலகலுக்குக் காரணம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் ஓடுதளத்தை விட்டுச் விலகியபோதிலும், விமானிகளின் சாதுரியமான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேவேளையில், விமானத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தோ அல்லது பயணிகளின் தற்போதைய நிலை குறித்தோ மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 11:37 am
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
October 27, 2026, 9:52 am
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஜப்பானிய செய்தியாளர்: ஜப்பானின் அதிகாரிகள் சந்திப்பு
October 26, 2026, 9:06 pm
பிரேசில் அதிபர் தேர்தல்: 81 வயதான லூலா மீண்டும் வெற்றி
October 26, 2026, 11:07 am
வட ஐரோப்பாவில் கடும் புயல்: விமானப் பயணங்கள் பாதிப்பு
October 26, 2026, 10:35 am
பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த மற்றொரு சீன நபர் கொக்கைனுடன் கைது செய்யப்பட்டார்
October 23, 2026, 5:45 pm
விலங்குகளிடம் காணப்படும் Shamonda வைரஸ்... மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி
October 23, 2026, 9:17 am
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
October 22, 2026, 11:51 am
சவூதி விமான நிலையத் தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்
October 21, 2026, 12:43 pm
