செய்திகள் உலகம்
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஜப்பானிய செய்தியாளர்: ஜப்பானின் அதிகாரிகள் சந்திப்பு
டோக்கியோ:
ரஷ்யாவில் உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள ஜப்பானியச் செய்தியாளரை, ஜப்பானியத் தூதரக அதிகாரிகள் முதன்முறையாக நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
செய்தியாளரை நேரில் சந்தித்த தூதரக அதிகாரிகள், அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் ஜப்பான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் உள்ள சக்காலின் தீவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், ‘யுகி இமாய்’ என்ற அந்த ஜப்பானியச் செய்தியாளரை ரஷ்யப் பாதுகாப்புப் படையினர் அண்மையில் கைது செய்தனர்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்துக் குரல் கொடுத்துள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சு, கைது செய்யப்பட்டுள்ள தங்கள் நாட்டுச் செய்தியாளரை ரஷ்யா உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அவருக்குச் சட்டப்படியான நியாயமான விசாரணையும் மனிதநேய அடிப்படையிலான அணுகுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில், ஜப்பான் அரசு செய்தித்துறையைச் சேர்ந்தவர்களை உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக மாஸ்கோ குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், ரஷ்யாவின் இந்தச் சாட்டை ஜப்பான் பிரதமர் சனே தக்காஇச்சி முற்றிலும் மறுத்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 11:37 am
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
October 27, 2026, 11:10 am
தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகிய 'ஜெட்2' விமானம்: பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பரபரப்பு
October 26, 2026, 9:06 pm
பிரேசில் அதிபர் தேர்தல்: 81 வயதான லூலா மீண்டும் வெற்றி
October 26, 2026, 11:07 am
வட ஐரோப்பாவில் கடும் புயல்: விமானப் பயணங்கள் பாதிப்பு
October 26, 2026, 10:35 am
பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த மற்றொரு சீன நபர் கொக்கைனுடன் கைது செய்யப்பட்டார்
October 23, 2026, 5:45 pm
விலங்குகளிடம் காணப்படும் Shamonda வைரஸ்... மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி
October 23, 2026, 9:17 am
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
October 22, 2026, 11:51 am
சவூதி விமான நிலையத் தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்
October 21, 2026, 12:43 pm
