செய்திகள் உலகம்
பிரேசில் அதிபர் தேர்தல்: 81 வயதான லூலா மீண்டும் வெற்றி
பிரேசிலியா:
பிரேசில் அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
4ஆவது தவணைக்கு அவர் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
பிரேசில் வரலாற்றில் முதல் சுற்றில் தோல்வி அடைந்த பின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் வேட்பாளர் அவர்.
இம்மாதத் தொடக்கத்தில் நடந்த முதல் சுற்றில் அவர் ஃபிலாவியோ பொல்சொனாரோவிடம் (Flavio Bolsonaro) தோல்வியடைந்தார்.
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜாயிர் பொல்சொனாரோவின் (Jair Bolsonaro) மகன் ஃபிலாவியோ பொல்சொனாரோ.
லூலாவின் தேர்தல் வெற்றிக்கான பாதையில் பல தடைகள் இருந்தன.
கிட்டத்தட்ட 81 வயதான லூலாவின் உடல் ஆரோக்கியம் குறித்துக் கேள்விகள் எழுந்தன.
தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் அவர் முதல்முறையாகக் கைத்தொலைபேசி ஒன்றை வாங்கினார்.சமூக ஊடகம் வழி நாட்டு மக்களைக் கவர முயன்றார்.
சுமார் 51.7 விழுக்காட்டு வாக்குகளுடன் லூலா நூலிழையில் வெற்றி பெற்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 11:37 am
இன்றைய தேர்தலில் நான் வெற்றிபெற்றால் மீண்டும் ஈரானுடன் போர்: இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு
October 27, 2026, 11:10 am
தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகிய 'ஜெட்2' விமானம்: பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பரபரப்பு
October 27, 2026, 9:52 am
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஜப்பானிய செய்தியாளர்: ஜப்பானின் அதிகாரிகள் சந்திப்பு
October 26, 2026, 11:07 am
வட ஐரோப்பாவில் கடும் புயல்: விமானப் பயணங்கள் பாதிப்பு
October 26, 2026, 10:35 am
பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த மற்றொரு சீன நபர் கொக்கைனுடன் கைது செய்யப்பட்டார்
October 23, 2026, 5:45 pm
விலங்குகளிடம் காணப்படும் Shamonda வைரஸ்... மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி
October 23, 2026, 9:17 am
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
October 22, 2026, 11:51 am
சவூதி விமான நிலையத் தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்
October 21, 2026, 12:43 pm
