செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்: இன்று 28 வேட்புமனு மையங்கள் திறக்கப்படுகின்றன
மலாக்கா:
16ஆவது மலாக்கா மக்கள் விடுதலைப் பேரணிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி, மாநிலம் முழுவதும் உள்ள 28 வேட்புமனு மையங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுப் படிவங்களை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க காலை 10 மணி வரை ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்களுக்கு, அதாவது நவம்பர் 13, இரவு 11.59 மணி வரை, மக்களின் ஆணையைப் பெறுவதற்கான தேர்தல் பிரச்சாரக் கட்டம் தொடங்கும்.
மலாக்கா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாக நவம்பர் 14ஐ தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
அதே சமயம் முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் நவம்பர் 10 ஆகும்.
தேர்தல் ஆணையத்தின்படி, வியாழக்கிழமை இரவு நிலவரப்படி மலாக்காதேர்தலுக்காக மொத்தம் 189 வேட்புமனுப் படிவங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும் 45 வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையைச் செலுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த தேர்தலில் 687,697 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 675,166 சாதாரண வாக்காளர்கள், 9,769 இராணுவ வீரர்கள், அவர்களது துணைவர்கள், 2,762 போலிஸ் துறையினர் அடங்குவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 10:30 am
மலாக்கா தேர்தல்: காடேக் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முனை போட்டி
October 30, 2026, 10:36 pm
மலாக்கா தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் நாளில் காலையில் வானிலை சீராக இருக்கும்
October 30, 2026, 10:30 pm
குளுவாங்கில் LED திரையில் ஆபாச படம் ஒளிபரப்பு: போலிஸ் இரு விசாரணை அறிக்கைகள் திறப்பு
October 30, 2026, 10:27 pm
மலாக்கா மாநில தேர்தல்: 18 இடங்களை வெல்ல நம்பிக்கை கூட்டணி இலக்கு
October 30, 2026, 8:35 pm
மசீசவுக்குக் கூடுதல் தொகுதி கிடைத்தது: ஜசெகவின் கோட்டையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டது
October 30, 2026, 8:35 pm
பூச்சோங்கில் சுடுநீரில் ஊறவைக்கப்பட்டு அறுக்கப்பட்ட 6.5 டன் கோழிகள் பறிமுதல்
October 30, 2026, 8:34 pm
