நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல்: 18 இடங்களை வெல்ல நம்பிக்கை கூட்டணி இலக்கு

மலாக்கா: 
16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 18 இடங்களில் வெற்றிக் கொள்ள இலக்கு கொண்டுள்ளது 

இந்த தகவலை மலாக்கா மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் அட்லி சஹாரி கூறினார். 

அரசியல் கூட்டணியின் பலத்தைக் கருத்தில் கொண்டு வேட்பாளர்களை மதிப்பீடு செய்தும் மலாக்கா மாநில மக்கள் நம்பிக்கை கூட்டணியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். 

நம்பிக்கை கூட்டணி 24 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. 

அதில் பிகேஆர் கட்சி 10 தொகுதிகளிலும் அமானா 7 தொகுதிகளிலும் ஜசெக 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்

16ஆவது மலாக்கா மாநில பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது

 

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset