நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிஎஸ்ஏ: அரசியலுக்கு நேரமும் இடமும் உண்டு, இது நாட்டை மேம்படுத்துவதற்கான நேரம்: யுனேஸ்வரன்

புத்ராஜெயா:

கூட்டரசு அரசாங்கத்துடன் நம்பிக்கை, வழங்கல் ஒப்பந்தத்தில் (சிஎஸ்ஏ) கையெழுத்திட பெர்சத்து காட்டியுள்ள தயார்நிலை, மக்களின் நலன்கள், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டிய ஒரு முன்னேற்றமாகும்.

சிஎஸ்ஏ மூலம் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் நிலையான அரசியல் சூழலை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

அதன் மூலம் தேசிய நிர்வாகம் வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வழிவகுக்கும் என்றும் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் கூறினார்.

எதிர்க்கட்சிக்கு சிஎஸ்ஏ வழங்குவது ஒரு புதிய அணுகுமுறை அல்ல.

ஏனெனில் மடானி அரசாங்கத்தின் நிர்வாகம் தொடங்கியதிலிருந்தே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகைய ஒத்துழைப்புக்குத் திறந்த மனப்பான்மையைக் காட்டியுள்ளார்.

இருப்பினும், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் பெர்சத்து என்ற எதிர்க்கட்சி, கூட்டரசு அரசாங்கத்துடன் ஒரு பொது சேவை ஒப்பந்தத்தில் (சிஎஸ்ஏ) கையெழுத்திடத் தனது தயார்நிலையை வெளிப்படுத்த முன்வந்துள்ளது என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்த முன்னேற்றத்தை, கட்சிகளுக்கு இடையேயான போட்டியை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், மக்களின் நலன்கள், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நிர்வாகத்தின் தொடர்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் பார்க்க வேண்டும் என்று யுனேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset