நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ஸ்ரீ சாங்கரி பரம்பரா நூலில் உள்ள மகத்துவங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்: டத்தோ அசோஜன்

கோலாலம்பூர்:
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ஸ்ரீ சாங்கரி பரம்பரா நூலில் உள்ள மகத்துவங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.

மஇகா உதவித் தலைவர் டத்தோ அசோஜன் இதனை வலியுறுத்தினார்.

நான்கு பாகங்களைக் கொண்ட இந்த நூல் தொகுப்பை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70ஆவது ஜகத்குரு சங்கராச்சாரியார், பரமபூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (பால பெரியவர்) அருளியுள்ளார்.

இந்த நூலை ஸ்தாப்பாக் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக மலேசியாவில் வெளியீடு செய்துள்ளது.

ஆலயத்திற்காக நிலம் வாங்க நிதி திரட்டும் நோக்கில் இப்புத்தகம் இன்று வெளியீடு செய்துள்ளது.

பணி சுமையிம் காரணமாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

அவரின் சார்பாக இவ்விழாவில் கலந்து நூலை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நூல் நமது பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள உதவும் இக்கொள்கை, வண்ணப் படங்களுடன் கூடிய பயனுள்ள தலைக்கலஞ்சியமாகத் திகழ்கிறது.

பூஜை பாத்திரங்களும் அவற்றின் பயன்பாடுகளும், வழிபாட்டிற்கு பயன்படுத்தப் படும்
மலர்கள், இலைகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் தாவரங்களின் சிறப்புகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன.

மேலும், பாரம்பரிய இனிப்பு வகைகள் உட்பட 97 வகையான நைவேத்தியம் மற்றும் பிரசாதத் தயாரிப்பு முறைகளும் இடம்பெற்றுள்ளன.

அழகிய வண்ணப் புகைப்படங்களுடன், பொருட்களின் பெயர்கள் தமிழில் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், வீடுகளிலும் ஆலயங்களிலும் நாம் அன்றாடம் காணும் வழிபாட்டுப் பொருட்களை அடையாளம் காணவும், அவற்றின் பயன்பாட்டையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

இப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட இந்நூல் அனைவரையும் சென்றடைய வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு இந்நூல் நிச்சயம் வழிகாட்டும் என்று டத்தோ அசோஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்றைய விழாவில் ஆலய அறங்காவலர் டத்தோ ராஜா சைமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset