நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங்கில் சுடுநீரில் ஊறவைக்கப்பட்டு அறுக்கப்பட்ட 6.5 டன் கோழிகள் பறிமுதல்

பூச்சோங்:

இஸ்லாமியச் சட்டம், ஹலால் சான்றிதழ் தேவைகளுக்கு இணங்க அறுக்கும் முறைகளைப் பின்பற்றாமல் பதப்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6.5 டன்களுக்கும் அதிகமான கோழிகள், நேற்று நள்ளிரவில் பூச்சோங்கில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 'ஆப்ஸ் டாரிங் சில்லர்' நடவடிக்கையில், அந்த வளாகத்தில் கோழிகளை அறுத்து பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக நம்பப்படும் வங்காளதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் உள் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின்  வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தளபதி டத்தோ முகமது ஜாக்கி அஷார் இதனை கூறினார்.

நள்ளிரவு 12.40 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட வளாகம் செல்லுபடியாகும் ஹலால் சான்றிதழ் இல்லாமல் புதிய கோழிகளை அறுத்து, பதப்படுத்தி, விநியோகிக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset