நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா தேர்தல் தொகுதி பங்கீடு: ம.சீ.ச அவசர கூட்டத்தை நடத்துகிறது 

பெட்டாலிங் ஜெயா: 

மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து தொகுதி பங்கீடு விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் ம.சீ.ச இன்று மாலை அவசர கூட்டத்தை நடத்துகிறது 

இந்த அவசர கூட்டம் கோலாலம்பூரில் உள்ள ம.சீ.ச கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது 

தொகுதி பங்கீடு குறித்து அதிருப்தி அடைந்த ம.சீ.ச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் கடந்த சனிக்கிழமை நடந்த தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் நடுவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

இந்த விவகாரம் தேசிய முன்னணி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

ம.சீ.ச இதற்கு முன் போட்டியிட்ட தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு வழங்குவதில் ம.சீச அதிருப்தி கொள்வதாக டத்தோஶ்ரீ வீ கா சியோங் குற்றஞ்சாட்டினார். 

கடந்த 2021 மலாக்கா மாநில தேர்தலில் ம.சீ.ச ஏழு இடங்களில் போட்டியிட்டது. இருப்பினும் தற்போது கெலெபாங், மச்சாப் ஜெயா ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். 

தேசிய முன்னணி 21 இடங்களில் போட்டியிடவுள்ள நிலையில் பாஸ் கட்சி 7 இடங்களில் போட்டியிடவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset