செய்திகள் மலேசியா
சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் உதவியாளர் என்ற பெயரில் மோசடி: சந்தேக நபர் கைது
பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் உதவியாளர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்டு மோசடியில் ஈடுபட்ட ஆடவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
40 வயதுடைய சந்தேக நபர் நேற்று மாலை 5 மணியளவில் ஜொகூர் பாருவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் ஷசெலி கஹார் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆடவருக்கும் சிலாங்கூர் மாநில அரசவை கழகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அவர் சொன்னார்.
சந்தேக நபர் கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களில் மோசடி வழக்குகளுடன் தொடர்புடையவர் என்று ஷாசெலி கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர் ராஜா மூடாவின் பாதுகாவலர் என்று கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் மீது சிலாங்கூர் அரண்மனை போலிஸ் புகார் ஒன்றை மேற்கொண்டது
இந்த விவகாரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிலங்கூர் அரண்மனை கேட்டுக்கொண்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 5:41 pm
பாங்கி கொள்ளை சம்பவத்தில் கடத்தல் முயற்சிகள் நடைபெறவில்லை: போலிஸ் உறுதி
October 28, 2026, 5:38 pm
சரவாக் சட்டமன்ற தேர்தலில் GPS கூட்டணி அனைத்து 82 இடங்களிலும் போட்டி
October 28, 2026, 3:37 pm
மலாக்கா தேர்தல் தொகுதி பங்கீடு: ம.சீ.ச அவசர கூட்டத்தை நடத்துகிறது
October 28, 2026, 2:52 pm
கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை அறிக்கை DPP தரப்பிடம் ஒப்படைப்பு
October 28, 2026, 12:06 pm
Waze-க்கு மாற்றாக TuJu-வை அமல்படுத்தும் விவகாரம்; திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்: கணபதிராவ்
October 28, 2026, 12:05 pm
