செய்திகள் மலேசியா
சரவாக் சட்டமன்ற தேர்தலில் GPS கூட்டணி அனைத்து 82 இடங்களிலும் போட்டி
பெட்டாலிங் ஜெயா:
16ஆவது சரவாக் மாநில சட்டமன்ற தேர்தலில் சரவாக் GPS கூட்டணி அனைத்து 82 சட்டமன்ற இடங்களிலும் போட்டியிடவுள்ளது
இந்த தகவலை சரவாக் GPS கட்சியின் தலைவர் அபாங் ஜொஹாரி ஒப்பெங் கூறினார்.
GPS கட்சியின் கூட்டம் இன்று நடைபெற்ற வேளையில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அபாங் ஜொஹாரி விளக்கமளித்தார்
வேட்பாளர்கள் வெல்லும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிகளுக்கு வழங்கப்படும் என்பதையும் விரைவில் அறிவிப்போம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
சரவாக் மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நவம்பர் 6ஆம் தேதி மலேசியத் தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டத்தை நடத்தும் என்று தெரிவித்தது
கடந்த 2021 சரவாக் மாநில தேர்தலில் GPS கூட்டணி 76 இடங்களை வென்ற நிலையில் PSB கட்சி 4 இடங்களையும் DAP கட்சி இரு இடங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 5:41 pm
பாங்கி கொள்ளை சம்பவத்தில் கடத்தல் முயற்சிகள் நடைபெறவில்லை: போலிஸ் உறுதி
October 28, 2026, 5:39 pm
சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் உதவியாளர் என்ற பெயரில் மோசடி: சந்தேக நபர் கைது
October 28, 2026, 3:37 pm
மலாக்கா தேர்தல் தொகுதி பங்கீடு: ம.சீ.ச அவசர கூட்டத்தை நடத்துகிறது
October 28, 2026, 2:52 pm
கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை அறிக்கை DPP தரப்பிடம் ஒப்படைப்பு
October 28, 2026, 12:06 pm
Waze-க்கு மாற்றாக TuJu-வை அமல்படுத்தும் விவகாரம்; திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்: கணபதிராவ்
October 28, 2026, 12:05 pm
