நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடா, பெர்லிஸ் வெள்ள நிலைமை சீரடையவில்லை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு 

அலோர் ஸ்டார்: 

கெடா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. 

இன்று காலை 8 மணி நிலவரப்படி 192-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 71 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கெடாவின் யான் மாவட்டத்தில் உள்ள கம்போங் தெரோய் புக்கிட் மற்றும் கம்போங் திதி தெராஸ் ஆகிய பகுதிகளை  சேர்ந்த மக்களே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கெடா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் தெரிவித்துள்ளது.

பெர்லிஸில் உள்ள கங்கார் Dewan Batu 5 மண்டபத்தில் அமைக்கப்பட்ட இடைக்கால மையத்தில், 7 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.50 மணி முதலே இந்த மண்டபம் தங்குமிடமாகச் செயல்பட்டு வந்தாலும், மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக இன்னும் நிவாரண மையங்கள் திறக்கப்படவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset