செய்திகள் மலேசியா
கூர்மையான ஆயுதத்தால் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை அறிக்கை DPP தரப்பிடம் ஒப்படைப்பு
கூச்சிங்:
கூச்சிங்கில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் விசாரணை அறிக்கைகள் துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
துணை அரசு வழக்கறிஞரின் பார்வையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சரவாக் மாநில இடைக்கால போலிஸ் தலைவர் சைஃபுலிசான் இஷாக் கூறினார்.
சந்தேக நபரின் மனநல பரிசோதனை அறிக்கை என்பது இதில் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது
சம்பவம் நிகழ்ந்தபோது சந்தேக நபரின் மனநலம் எவ்வாறு இருந்தது குறித்தும் அவர் வேண்டுமென்றே இந்த காரியத்தில் ஈடுபட்டாரா இல்லையா என்பது குறித்து ஆராயப்படும் என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட 42 வயதுடைய ஆசிரியருக்கு இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில் கூச்சிங்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலிஸ் தரப்பு 38 சாட்சியாளர்களிடம் குறிப்பாக பெற்றோர், பிள்ளைகள், இதர மாணவர்களிடம் விசாரணையை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்
கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு ஒருவருக்கு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 3:37 pm
மலாக்கா தேர்தல் தொகுதி பங்கீடு: ம.சீ.ச அவசர கூட்டத்தை நடத்துகிறது
October 28, 2026, 12:06 pm
Waze-க்கு மாற்றாக TuJu-வை அமல்படுத்தும் விவகாரம்; திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்: கணபதிராவ்
October 28, 2026, 12:05 pm
கெடா, பெர்லிஸ் வெள்ள நிலைமை சீரடையவில்லை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
October 28, 2026, 12:03 pm
வங்காளதேச நபரின் குடியுரிமை சட்டப்பூர்வமானது: தேசியப் பதிவுத் துறை
October 28, 2026, 11:33 am
பெர்லிஸ் படகு விபத்து: மலேசிய கடலோரக் காவல் படை விசாரணை
October 28, 2026, 10:36 am
