செய்திகள் மலேசியா
Waze-க்கு மாற்றாக TuJu-வை அமல்படுத்தும் விவகாரம்; திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்: கணபதிராவ்
கிள்ளான்:
TuJu தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, Waze-க்கு மாற்றாக மலேசியாவில் தயாரிக்கப்பட்ட புதிய சாலை வழி செலுத்தல் செயலியை உருவாக்க மத்திய அரசு ஒரு திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் தொழில்நுட்பத் திட்டங்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நியாயமான போட்டியை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் ஒரு திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்.
அவ்வகையில் பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கின் அழைப்பை ஆதரிப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் கூறினார்.
TuJu திட்டத்தின் செலவு, கொள்முதல் செயல்முறை, உரிமை, உருவாக்குநர்களின் தேர்வு மற்றும் ஒப்பந்த ஒப்புதலுக்கான அடிப்படை ஆகியவற்றை அரசாங்கம் விளக்க வேண்டும்.
இதில், புரோசிக்னல் கன்சார்டியம் எஸ்.டி.என். பி.எச்.டி இந்தத் திட்டத்தை எவ்வாறு கையகப்படுத்தியது. திறந்த டெண்டர் செயல்படுத்தப்பட்டதா என்பதும் அடங்கும்.
திறந்த டெண்டர் இல்லை என்றால், அரசாங்கம் அதற்கான காரணங்களை விளக்க வேண்டும் மற்றும் முறையான வணிக மற்றும் சட்டரீதியான பரிசீலனைகளுக்கு உட்பட்டு, ஒப்புதல் செயல்முறை, ஒப்பந்த ஏற்பாடுகள் மற்றும் செலவினங்களை வெளியிட வேண்டும்.
உள்ளூர் இலக்கவியல் தீர்வுகளை உருவாக்கும் திறன் கொண்ட மென்பொருள் பொறியாளர்கள், தொழில்நுட்ப தொழில்முனைவோர், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மலேசியாவில் உள்ளனர் என்றும், அரசாங்கத் திட்டங்களை வழங்குவதில் அவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் கணபதிராவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 12:05 pm
கெடா, பெர்லிஸ் வெள்ள நிலைமை சீரடையவில்லை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
October 28, 2026, 12:03 pm
வங்காளதேச நபரின் குடியுரிமை சட்டப்பூர்வமானது: தேசியப் பதிவுத் துறை
October 28, 2026, 11:33 am
பெர்லிஸ் படகு விபத்து: மலேசிய கடலோரக் காவல் படை விசாரணை
October 28, 2026, 10:36 am
பிடிபிடிஎன் கடன் வசூலிப்பாளர்கள் ஆலோங் போல் நடந்துகொள்ளக் கூடாது: ஸம்ரி
October 28, 2026, 9:53 am
