நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநிறுவன மாபியா கும்பலுக்குச் சொந்தமான 409 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை போலிஸ் பறிமுதல் செய்து முடக்கியுள்ளது: சைபுடின்

கோலாலம்பூர்:

பெருநிறுவன மாபியாவின் நடவடிக்கைகள் குறித்த தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுமார் 409 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை போலிஸ் முடக்கி பறிமுதல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கையில் எட்டு சொத்துக்கள், 11 வாகனங்கள், 417 மத்திய வைப்புத்தொகை அமைப்பு கணக்குகள், சுமார் 323.59 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 70 பங்கு வர்த்தகக் கணக்குகள்,  சுமார் 85.62 மில்லியன் ரிங்கிட் இருப்பு கொண்ட 404 வங்கிக் கணக்குகள் ஆகியவை அடங்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ  சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

செப்டம்பர் 25 நிலவரப்படி, போலிஸ் 70 நபர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

விசாரிக்கப்பட்டவர்களின் பின்னணி, அடையாளங்களின் அடிப்படையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் யாரும் இந்த விசாரணையில் ஈடுபட்டதாகவோ அல்லது உதவியதாகவோ அடையாளம் காணப்படவில்லை என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

ஒரு விரிவான விசாரணையை நடத்துமாறு அமைச்சரவை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பெருநிறுவன மாஃபியா விவகாரம் குறித்த போலிஸ் விசாரணையின் நோக்கம் மற்றும் தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரிய பெங்கலான் சபா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மத் மர்சுக் ஷாரி எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

போலிஸ் விசாரணை ஆவணங்களை நிறைவு செய்வதற்கு ஏதுவாக, 'ஆபரேஷன் வைக்கிங்' என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset