நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த கால பகைமையை மறந்து, மலாக்காவில் ஒரு புதிய அணியாக தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி செயல்பட வேண்டும்: ஜாஹித்

மஸ்ஜித் தானா:

மலாக்கா மாநிலத் தேர்தலில் இரு கூட்டணிகளுக்கும் இடையிலான புதிய புரிதல் வெற்றியாக மாறுவதை உறுதிசெய்ய,  தேசிய முன்னணி தனது கட்சி அமைப்பும் தேசியக் கூட்டணியுடன் கடந்தகால அரசியல் விரோதத்தை மறக்க வேண்டும்.

பொதுவான இலக்குகளை அடைய இரு கட்சிகளும் தங்களின் முந்தைய வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் மலாக்காவின் புதிய அரசியல் சூழலை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

முன்னர் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சுமுகமற்ற அரசியல் உறவுகள் இருந்தபோதிலும், இரு கட்சிகளும் மூலோபாயப் பங்காளிகளாக ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டு இந்த புதிய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இது ஒரு புதிய கூட்டாளி, நமது மூலோபாயப் பங்காளி... முன்பு நாங்கள் பச்சை நிறத்திற்கு ஒவ்வாமை கொண்டவர்களாகவும், அவர்கள் நீல நிறத்திற்கு ஒவ்வாமை கொண்டவர்களாகவும் இருந்தபோதிலும், இப்போது அது மாறி, மலாக்காவில் ஒரு புதிய அரசியல் சூழலாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset